உலக செய்திகள்

‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா சொல்கிறார் + "||" + 'Modi Goverment is the dice' I was told that it was proven - says Vijay Mallya

‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா சொல்கிறார்

‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா சொல்கிறார்
மோடி அரசின் பகடைக்காய் என தான் கூறியது நிரூபணமாகி விட்டதாக விஜய் மல்லையா கூறினார்.
லண்டன்,

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி, விஜய் மல்லையா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன்மூலம், மோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் ஏற்கனவே கூறியது சரி என்று நிரூபணமாகி விட்டது.

முழுமையாக கடன்களை திரும்ப பெற்று விட்டதாக உயர்ந்த அதிகாரம் படைத்தவரே சொன்ன பிறகும், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் ஏன் இன்னும் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு விஜய் மல்லையா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் 100 நாட்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்தது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்பதை மனதில் கொண்டு அமைச்சர்கள் இந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
2. “மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும்”: கோவா முதல்-மந்திரி சொல்கிறார்
மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும் என கோவா முதல்-மந்திரி கூறினார்.
3. மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்
மத்தியில் 2-வது முறையாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசின் ஆட்சி தனது 50-வது நாளை கடந்த வாரம் பூர்த்தி செய்துள்ளது. எனவே எங்களது சாதனைகளை பட்டியலிடுவதுடன், எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களையும் வெளியிட இதுவே உரிய தருணமாகும்.
4. மோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்
மோடி அரசின் 50 நாள் செயல்பாடுகள், சாதனைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
5. மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும் பியூஸ் கோயல் பேச்சு
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் பலியானது போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று பியூஸ் கோயல் கூறினார்.