நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழையால் பெரும் சேதம்: 27 பேர் பலி, 400 பேர் காயம்


நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழையால் பெரும் சேதம்: 27 பேர் பலி, 400 பேர் காயம்
x
தினத்தந்தி 1 April 2019 2:38 AM GMT (Updated: 1 April 2019 2:38 AM GMT)

நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த கனமழையில் சிக்கி 27 பேர் பலியாகினர்.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்ததில் 27 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 128 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாரா மாவட்டடம் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து, தேசிய அவசர மேலாண்மை மைய பிரிவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கனமழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில், ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக நேபாள நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story