சீனாவில் காட்டுத்தீ; 26 தீயணைப்பு வீரர்கள் பலி


சீனாவில் காட்டுத்தீ; 26 தீயணைப்பு வீரர்கள் பலி
x
தினத்தந்தி 1 April 2019 10:18 AM GMT (Updated: 1 April 2019 10:18 AM GMT)

சீனாவின் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க சென்ற 26 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.

செங்டு,

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 3,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக தீயை அணைப்பதற்காக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காற்று திசைமாறி வீசியதில் அவர்களில் 30 பேர் வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.  காணாமல் போன அவர்களை தேடும் பணியும் தொடர்கிறது.

அவர்களை மீட்கும் பணிக்கு உதவியாக பேரிடர் மேலாண் அமைச்சகம் அனுப்பிய குழு ஒன்றும் அங்கு சென்று உள்ளது.  இந்நிலையில் அதிகாரிகள் 2 தீயணைப்பு வீரர்களிடம் பேசியுள்ளனர்.  அவர்கள் 24 பேர் பலியான தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர்.  இத்தகவலை அந்நாட்டு ராணுவ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story