உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 7:40 PM GMT)

சுவிட்சர்லாந்தில் 5ஜி செல்போன் இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


* ஏமனில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுடன் கடந்த டிசம்பர் மாதம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்குமாறு ஹவுதி பிரதிநிதிகள் ஐ.நா. தூதர் மார்ட்டின் கிரிப்பித்தை நேற்று முன்தினம் சந்தித்து வலியுறுத்தினர்.

* சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த 30-ந் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளனர். அங்கு நேற்று முன்தினம் திடீரென காற்றின் திசை மாறியதால், தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் 24 பேர் உயிரிழந்தனர்.

* ஜெருசலேம் மற்றும் கோலன்கெயிட்ஸ் தொடர்பாக அமெரிக்கா ஒருதலைப்பட்சமான முடிவை வெளியிட்டதால் காஸா முனைப்பகுதியில் நிலவும் பதற்றம் குறித்து பாலஸ்தீன அதிபர் மக்முத் அப்பாசுடன், ரஷிய வெளியுறவு துணை மந்திரி மிகெயில் பாக்டனோவ் ஆலோசனை நடத்தினார்.

* சுவிட்சர்லாந்தில் 5ஜி செல்போன் இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆன்டெனாக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆன்டெனாக்களால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என நாடு முழுவதும் மக்கள் அச்சம் தெரிவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சிக்லயோ சென்ற ஒரு பஸ்சில் திடீரென தீப்பிடித்ததால் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Next Story