உலக செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’டிரம்ப் சொல்கிறார் + "||" + For US goods India is a high tax country Trump says

அமெரிக்க பொருட்களுக்கு‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’டிரம்ப் சொல்கிறார்

அமெரிக்க பொருட்களுக்கு‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’டிரம்ப் சொல்கிறார்
உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப் பேசினார்.
வாஷிங்டன்,

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார்.

இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் (அமெரிக்க பொருட்களுக்கு) உலகிலேயே அதிகம் வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. நாம் நமது ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அவர்கள் 100 சதவீத வரி விதிக்கிறார்கள். இது சரியல்ல” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை
வியட்நாமில் நடந்த டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.
2. 27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.
3. வடகொரிய அதிபருடனான சந்திப்பு எப்போது? அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை வியட்நாமில் சந்தித்து பேச இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. அரசு அலுவலகங்கள் மூடல் எதிரொலி :அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளிநாட்டு பயணம் ரத்து - டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் விவகாரத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் 5.7 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.40,470 கோடி) அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கோரி வருகிறார். இதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி நிராகரித்து விட்டது.
5. டிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.