உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 5 April 2019 10:00 PM GMT (Updated: 5 April 2019 6:06 PM GMT)

* பிரெக்ஸிட் நடவடிக்கையை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

* ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகிறார்கள். தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

* அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப்போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருநாடுகள் இடையே 4 வாரங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக விரைவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.

* பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சூலுவில் பாதுகாப்புபடை வீரர்களுக்கும், அபு சாயப் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகளும், 3 ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 19 வீரர்களும், 9 பயங்கரவாதிகளும் படுகாயம் அடைந்தனர்.

* இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி 346 பேரை பலி கொண்டதற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் மிலன்பர்க் மன்னிப்பு கோரினார்.

Next Story