உலக செய்திகள்

உலகைச்சுற்றி.... + "||" + Around the world

உலகைச்சுற்றி....

உலகைச்சுற்றி....
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடுமாறு கேட்பது சட்ட விரோதம் என அவரது வக்கீல் சொல்கிறார்.
* தாய்லாந்து தேர்தல் முடிவுகளை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அங்கு 25 கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

* ஈரான் ராணுவத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிற இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம்.

* அமெரிக்க நாட்டினுள் இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்து கைது ஆவது 56 சதவீத அளவு குறைந்திருக்கிறதாம். மெக்சிகோ எல்லைச்சுவரை அமெரிக்கா கட்டுவதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

* காசா எல்லையில் இஸ்ரேல் படையினருடனான மோதலில் இந்த வாரம் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

* லிபியாவின் திரிபோலி நகரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதிக்குள் ராணுவம் நுழைந்து, ஒரு பயங்கரவாத கும்பலை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஆப்கானிஸ்தானில் பாத்கிஸ் மாகாணத்தில் அப் காமரி மாவட்டம், தலீபான்கள் ஆதரவு பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* புரூனே நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாலும், கள்ள உறவு கொண்டாலும் குற்றவாளிகள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக புரூனே நாட்டின் ஓட்டல்களை இங்கிலாந்து நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* சோமாலியா நாட்டின் வடக்கு பகுதியில் அமெரிக்க சிறப்பு படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.