உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 7 April 2019 9:45 PM GMT (Updated: 7 April 2019 6:58 PM GMT)

ஈரானின் ஹார்மோக்கன் மாகாணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.


* ஈரானின் ஹார்மோக்கன் மாகாணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* சூடானில் அதிபர் உமர் அல் பஷீருக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் போராட்டக் காரர்கள் அதிபரின் வீட்டை சூறையாடியதாக தகவல்கள் பரவின. ஆனால் அந்நாட்டின் தகவல்தொடர்பு மந்திரி ஹாசன் இஸ்மாயில் இதனை மறுத்துள்ளார்.

* ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தில் இடைவிடாது கொட்டிதீர்த்த கனமழையால் அங்குள்ள மிகப்பெரிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

* இஸ்ரேலின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரை பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வாக்குறுதி அளித்துள்ளார்.

Next Story