உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் : அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி + "||" + Mines strike in Afghanistan: US soldiers kill 3

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் : அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் : அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

வாஷிங்டன், 

அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இதனால் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.

இதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, குண்டுவெடிப்பில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பளுகல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
பளுகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் பலி
விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் இறந்தார். திருச்சி தனியார் மருத்துமவனை நிர்வாகத்தின் மீது உறவினர்கள் சந்தேகமடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர்.
4. நேபாளத்தில் மேலும் 2 இந்திய வீரர்கள் பலி
நேபாளத்தில் மேலும் 2 இந்திய வீரர்கள் பலியாயினர்.
5. சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலி
சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலியாகின.