முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று வெளியிடப்படுகிறது


முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று வெளியிடப்படுகிறது
x
தினத்தந்தி 10 April 2019 10:10 AM GMT (Updated: 10 April 2019 10:10 AM GMT)

முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படுகிறது

புதுடெல்லி

விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்று, அதில் கருந்துளைகள் அமைந்திருப்பதாகும். இந்த கருந்துளைகளில் இருந்து புவி ஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கருந்துளைகள் விண்வெளி ஆய்வாளர்களால்  எந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தியும்,  இதுவரை  கருந்துளைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. கருந்துளை என்றுமே ஒரு புரியாத புதிராக, மர்மமாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும், கருந்துளைகளை ஆய்வு செய்து அவற்றை புரிந்துகொள்ள முயலும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்கின்றன.

உலகெங்கிலும் ஆறு தொலைநோக்கியிலிருந்து தரவைப் பயன்படுத்தி, ஹொரிசன் தொலைநோக்கி (EHT) திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் 53.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்  உள்ள  எம்87 விண்மீன்  திரளில் பெரிய கருந்துளை குறித்து  விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்த ஆய்வறிக்கையை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகின்றனர். விஞ்ஞானிகள்  கருந்துளை  கதிர்வீச்சுகளை வரைபடமாக்கி உள்ளனர். அதனையும் வெளியிடுகின்றனர்

அமெரிக்கா, சிலி, ஸ்பெயின், மெக்சிகோ, அண்டார்டிகா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெவ்வேறு இடங்களில் எட்டு தொலைநோக்கிகள் உள்ளன. பூமியின் அளவிலான தொலைநோக்கிப் பயன்பாட்டைப் போலவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story