மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்து கண்டு பிடிக்கும் நாய்கள்


மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்து கண்டு பிடிக்கும் நாய்கள்
x
தினத்தந்தி 10 April 2019 10:54 AM GMT (Updated: 10 April 2019 10:54 AM GMT)

மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயைப் பொருத்தவரையில் முன்கூட்டியே கண்டறிவது தான் மிக முக்கியமானது. இதற்கான சோதனைகளுக்கு செலவும் சற்று அதிகம். ஆனால், நாய்கள் மூலம் அந்த வேலை இனி எளிதாகப் போகிறது.

பீஃகில்ஸ் (Peagles) என்ற வகை நாய்களை வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன்படி, நோயற்ற மனிதன் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன.

உரிய பயிற்சி அளித்த பின்னர் நாய்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகளை நாய்கள் துல்லியமாக தேர்வு செய்தன.

Next Story