உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 5:01 PM GMT)

* சூடானில், அதிபர் உமர் அல் பசீர் பதவி விலகக்கோரி நடந்து வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

* இஸ்ரேல் நாட்டில் 120 இடங்களில் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், அவர் வலது சாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தொடர்ந்து 5-வது முறையாக பிரதமராகிறார்.

* உலக வங்கியின் தலைவராக அமெரிக்க நிதித்துறையின் முன்னாள் செயலாளர் டேவிட் மால்பஸ் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் ஈரானில் நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், அந்நாட்டின் மீது கொடுக்கக்கூடிய அழுத்தம் குறித்தும் ஆலோசித்தனர்.

* மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஷ்மா மன்சூர் மீது, மேலும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கான சூரிய சக்தி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.8½ கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Next Story