இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்


இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
x
தினத்தந்தி 13 April 2019 4:45 AM IST (Updated: 13 April 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் கிழக்கு கடற்கரைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று மாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்த்தா, 

ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாலு உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிகளில் தஞ்சமடைந்தனர்.

இதற்கிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதனால் பீதியடைந்த கடற்கரையோர மக்கள் அந்த பகுதிகளை விட்டு வேகமாக வெளியேறினர். இதனால் சுலாவேசி தீவு முழுவதும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.

இந்த தீவில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையால் சுமார் 4,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story