உலக செய்திகள்

114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது + "||" + switzerland doctor arrested

114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது

114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த  114 சிறுவர்களை  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரது நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 62 வயதான குறிப்பிட்ட  நபர் மீது சுமார் 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறும் நீதிமன்றம், மேலும் 33 வழக்குகள் அவரது பெயரில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கு நிரூபணமான 2014 ஆம் ஆண்டு, அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தற்போது உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவு
கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2. குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை
குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
3. இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது
இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார்.
4. குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற மாணவி
கேரளாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
5. உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணம் - ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் - என ஆய்வில் தெரியவந்து உள்ளது.