உலக செய்திகள்

பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி + "||" + 7 killed in rain-related incidents in Pak

பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி

பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி
பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் டேனின் கிராமத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் மலை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கற்கள் மற்றும் கழிவுகள் உருண்டோடி வந்து வீடு ஒன்றின் மீது விழுந்தன.  இதில் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பன்னர் மாவட்டத்தில் மலை பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திரும்பும்பொழுது திடீரென மலையிடுக்குக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள மலை பிரதேசங்களில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.  இங்கு பல நகரங்களில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் நிலச்சரிவுகளும் மற்றும் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
2. மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை
அரக்கோணத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
3. ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை மொடக்குறிச்சியில் 51 மி.மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 51 மி.மீட்டர் மழை பதிவானது.
4. திருக்கனூர் பகுதியில் இடி –மின்னலுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருக்கனூர் பகுதியில் இடி– மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5. மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
மியான்மர் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.