உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு + "||" + 7 children died in a bomb explosion in Afghanistan

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு
ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகர் மெக்டர்லாமில், ஒரு வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அங்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். அது வெடிகுண்டு என்பதை அறியாத சிறுவர்கள் அதை வைத்து விளையாடினர்.


அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் சிறுவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 15 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
உலக கோப்பை போட்டி தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது தாக்குதல்; 7 பேர் பலி - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாயினர். அந்த சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. உலகைச்சுற்றி...
ஆப்கானிஸ்தானில் ஜூலை மாதம் 20-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் செப்டம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் பரிதாபம்: செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்து 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்து 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
5. உலகைச்சுற்றி...
ஆப்கானிஸ்தானில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.