உலக செய்திகள்

அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி + "||" + UN owes India USD 38 million for peacekeeping operations

அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி

அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி
அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி வைத்துள்ளது.
நியூயார்க்,

உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.


இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் ராணுவ வீரர்கள் நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
நாகர்கோவிலில் ராணுவ வீரர்கள் நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நட்டனர்.
2. குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்
குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.
3. மகாராஷ்டிராவில் 39 வருடங்களில் நக்சல் தாக்குதலில் 224 வீரர்கள், பொதுமக்களில் 571 பேர் சுட்டு கொலை
மகாராஷ்டிராவில் கடந்த 1980ம் ஆண்டில் இருந்து 224 பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களில் 571 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதல்; 10 வீரர்கள் பலி
மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 10 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
5. வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த 8 அடி நீள முதலை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்
கும்பகோணம் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள முதலையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்.