உலக செய்திகள்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு + "||" + Accident at Tamil New Year Celebration: Death to 30 in Sri Lanka

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு
இலங்கையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பு,

இலங்கையில் 14-ந் தேதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 30 பேர் இறந்தனர்.

இது குறித்து இலங்கை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புத்தாண்டையொட்டி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 1,270 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 34 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் 30 பேர் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
லாரி சத்தியமங்கலம் நெடுஞ்சேரி கண்மாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2. இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
3. மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
4. மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தம்பதி படுகாயம் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரஷியாவில் பயங்கரம்: அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து 41 பேர் பலி
ரஷியாவில், அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததில் 41 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.