உலக செய்திகள்

சிலி நாட்டில் பயங்கரம்: வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் - பெண்கள் உள்பட 6 பேர் பலி + "||" + In Chile the plane crashed into the house - 6 people killed including women

சிலி நாட்டில் பயங்கரம்: வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் - பெண்கள் உள்பட 6 பேர் பலி

சிலி நாட்டில் பயங்கரம்: வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் - பெண்கள் உள்பட 6 பேர் பலி
சிலி நாட்டில், வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் பலியாயினர்.
சாண்டியாகோ,

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் ஒரு விமானியும், 2 பெண்கள் உள்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில நொடிகளில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எரிபொருள் கசிந்து தீப்பிடித்தது. இதில் விமானம் மற்றும் அந்த வீடு முற்றிலும் எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது - 7 பேர் பலி
கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
2. சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம் -இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்குகிறது
சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம். இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்குகிறது.