உலக செய்திகள்

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள் + "||" + 5 killed in a knife attack in South Korea: What is the reason? Sensitive information

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாயினர். இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சியோல்,

தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார். அதன் பின்னர் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார். இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.


இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு
முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
3. தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் - 3 பேர் பலி
தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
4. தாளவாடி அருகே விநாயகர்சிலையை கரைத்து திரும்பியபோது தகராறு நடனமாடியதை தட்டிக்கேட்ட தாய்-மகன் மீது தாக்குதல்
தாளவாடி அருகே விநாயகர் சிலையை கரைத்து திரும்பியபோது நடனமாடியதை தட்டிக்கேட்ட தாய், மகனை குடிபோதையில் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. சீனாவில் பயங்கரம்: பள்ளிக்கூடத்தில் புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 8 மாணவர்கள் பலி
சீனாவில் தொடக்கப்பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 மாணவர்கள் பலியாகினர். வெறிச்செயலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.