உலக செய்திகள்

19¼ கோடி வாக்காளர்கள்; 2½ லட்சம் வேட்பாளர்கள் : இந்தோனேசியா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு + "||" + 19¼ crore voters; 2½ lakh candidates: The election turnout was brisk in Indonesia

19¼ கோடி வாக்காளர்கள்; 2½ லட்சம் வேட்பாளர்கள் : இந்தோனேசியா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

19¼ கோடி வாக்காளர்கள்; 2½ லட்சம் வேட்பாளர்கள் : இந்தோனேசியா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
19¼ கோடி வாக்காளர்கள்; 2½ லட்சம் வேட்பாளர்கள் உள்ள இந்தோனேசியா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜகார்த்தா,

உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் ஒரே நாளில் நேற்று நடைபெற்றது.

இதன் மூலம் உலகிலேயே ஒரு நாளில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்தல் இது வர்ணிக்கப்படுகிறது. தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்ற 19 கோடியே 28 லட்சத்து 66 ஆயிரத்து 254 வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 8 லட்சத்து 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.


60 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வனப்பகுதி, தீவுகள் உள்ளிட்டவற்றில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு குதிரைகள் மற்றும் யானைகள் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

3 தேர்தல்களிலும் மொத்தமாக 20 கட்சிகளின் சார்பில் 2 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சி சார்பிலும் 30 சதவீத பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலை பொறுத்த மட்டில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் பிரபுவோ சுபியாண்டோ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அதிபர் ஜோகோ விடோடோவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தன.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் அதிபர் ஜோகோ விடோடோ முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் முறையான இறுதி முடிவுகளை அடுத்த மாதம் (மே) தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். கடந்த காலங்களில் வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான உடனடி முடிவுகள் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளன. எனவே ஜோகோ விடோடோ அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.