உலக செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை + "||" + 14 passengers shot dead after being offloaded from bus in Pakistan

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கராச்சி,

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலோசிஸ்தான் மாகாணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும்,  பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது. 

இந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை.  கடந்த வாரம், குவட்டாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 60 பேர் காயம் அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு
பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
2. சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்
பாகிஸ்தானில் இருந்து ஒரு விண்வெளி வீரரை முதன் முறையாக சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது
காஷ்மீர் பிரச்சினையில் முசாபராபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பெரிய பேரணி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார்.
4. ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்
ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.
5. கராச்சியை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தானுக்கு கண்டனம்
கராச்சியின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தான் ரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.