பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா


பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 19 April 2019 10:45 PM GMT (Updated: 19 April 2019 8:05 PM GMT)

பாகிஸ்தான் நிதி மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இஸ்லாமாபாத்,

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு, நிதி உதவி அளிக்க சர்வதேச நிதி ஆணையம் முன்வந்தது. இது தொடர்பான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதற்காக அந்நாட்டின் நிதி மந்திரி அசாத் உமர் (வயது 57) அமெரிக்கா சென்றிருந்தார். இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அண்மையில் அவர் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் டுவிட்டரில், “பிரதமர் இம்ரான்கான், மந்திரி சபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, நிதி மந்திரியாக இருக்கும் நான் எரிசக்தி துறை மந்திரி பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதன் காரணமாகவே, நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி பிரச்சினையை நிதி மந்திரி அசாத் உமர் முறையாக கையாளவில்லை என்று வர்த்தக சமூகத்தினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story