உலக செய்திகள்

தாய்லாந்தில் பரபரப்பு: கடலில் வீடு கட்டிய தம்பதிக்கு மரண தண்டனை? + "||" + Thailand: The death penalty for couples who built a house in the sea

தாய்லாந்தில் பரபரப்பு: கடலில் வீடு கட்டிய தம்பதிக்கு மரண தண்டனை?

தாய்லாந்தில் பரபரப்பு: கடலில் வீடு கட்டிய தம்பதிக்கு மரண தண்டனை?
தாய்லாந்தில் கடலில் வீடு கட்டிய தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பாங்காக்,

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரம் புக்கெட். இங்கு நேற்று முன்தினம் கடற்படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து 12 மைல் தொலைவில் கடலில் மிதக்கும் கான்கிரீட் தொட்டி இருப்பதை கண்டனர்.


உடனடியாக அங்கு விரைந்து, சோதனை செய்தனர். ஆனால் அதில் ஆட்கள் யாரும் இல்லை. இது குறித்து விசாரித்தபோது அமெரிக்காவை சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளரான சாத் எல்வர்டோஸ்கி மற்றும் தாய்லாந்தை சேர்ந்த அவரது காதலியான சுப்ரானி தெப்ட் ஆகியோர் கடலில் இந்த வீட்டை கட்டி வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது தாய்லாந்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என கூறி அவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சாத் எல்வர்டோஸ்கி தாங்கள் கட்டி இருக்கும் வீடு, கரையில் இருந்து 13 மைல் தொலைவில் இருப்பதாகவும், இது தாய்லாந்தின் நீர் பரப்புக்கு அப்பால் உள்ளது எனவும் கூறுகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் வேட்பாளர்களில் இளவரசி தகுதிநீக்கம்
ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இளவரசியின் பெயர் இடம்பெறவில்லை.
2. மூக்கில் ரத்த கசிவால் மக்கள் அவதி: தாய்லாந்தில் வேகமாக பரவும் நச்சுக்காற்று
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டி உள்ளது.
3. தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து 6 பேர் சாவு
தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாயினர்.
4. தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு
தாய்லாந்தில், பபுக் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.
5. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு
தாய்லாந்து நாட்டில் 2014–ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.