உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓட்டம் + "||" + Five dead as buildings collapse in Philippine quake

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓட்டம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:  5 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓட்டம்
பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓடினர்.
மணிலா,

பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.  மணிலா நகரின் வடமேற்கில் 100 கி.மீட்டர் தொலைவில் கேஸ்டில்லெஜோஸ் என்ற நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.  இதனால் அங்கு பணிபுரிந்து வந்த அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்து அலறியபடி வெளியேறி தெருக்களில் இறங்கி தப்பி ஓடினர்.

எனினும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.  நிலநடுக்கத்தினால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
2. கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
கஜகஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. இதய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருச்சியில் இதய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
4. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; 20 பேர் பலி
இந்தோனேசிய நாடு புவி தட்டுகள் அடிக்கடி நகரும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
5. தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பயண நேரம் 27 நிமிடங்கள்
தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு 27 நிமிடத்தில் செல்லலாம்.

ஆசிரியரின் தேர்வுகள்...