அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்


அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்
x
தினத்தந்தி 23 April 2019 4:14 AM GMT (Updated: 23 April 2019 4:14 AM GMT)

அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லமபாத்,

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள். நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது, நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்.

இந்திய விமானப்படை வீரர் 'கேப்டன்' அபிநந்தன், பாகிஸ்தானில் பிடிபட்டபோது, அவரை மீட்க, பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி பாகிஸ்தானிடம் தெரிவித்தார்” என்று மோடி பேசினார்.  பிரதமர் மோடியின்  இந்த பேச்சு, சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது, பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story