“முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'' மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு


“முன்னரே எச்சரிக்கப்பட்டோம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு
x
தினத்தந்தி 23 April 2019 10:23 AM GMT (Updated: 23 April 2019 10:23 AM GMT)

தாக்குதல் தொடர்பாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சியமாக இருந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்திரமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. தாக்குதல் நடத்தப்படும் வரையில் அதுதொடர்பாக 3 உள்ளீடுகள் பாதுகாப்பு வட்டார அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது என சர்வதேச மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சியமாக இருந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
 
இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பேசுகையில், இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக  உளவுத்துறையால் நாங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டோம். இலங்கையில் இயங்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அல்லது உள்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் தாக்குதலை நிகழ்த்தலாம் என முன்னரே எச்சரிக்கை அளிக்கப்பட்டது.  தாக்குதலை உள்நாட்டு அமைப்புகள் மட்டும் தனியாக நடத்தியிருக்க முடியாது.

இதில் சர்வதேச சக்திகளுக்கு தொடர்பு இருந்திருக்கக்கூடும். நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த குண்டு வெடிப்பில் இறந்த குடும்பங்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து குடுமபங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். பாதிப்படைந்த தேவாலயங்கள் புனரமைக்க உதவி செய்யப்படும் எனக் கூறினார்.

Next Story