உலக செய்திகள்

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல் + "||" + Police on alert for explosives laden lorry and van

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்
இலங்கையின் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு அச்சத்திலிருந்து மக்கள் வெளிவராத நிலையே தொடர்கிறது. இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்து 350க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 45 பேர் குழந்தைகள் என்று யுனிசெப் கூறியுள்ளது. இந்நிலையில் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி, வேன் நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்
இலங்கை குண்டு வெடிப்பில் ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள், வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
3. இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது
இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
4. இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி
இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.