மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்


மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
x
தினத்தந்தி 23 April 2019 12:56 PM GMT (Updated: 23 April 2019 12:56 PM GMT)

மியான்மர் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மர் நாட்டில் தாது பொருட்களை எடுப்பதற்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் பல முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.  இதனால் சுரங்கங்களில் நிலச்சரிவுகளும், விபத்துகளும் வழக்கம்போல் நடைபெறும் ஒரு நிகழ்வாகி விட்டது.  இந்த நிலையில், பச்சை மாணிக்க கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் திடீரென இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சுரங்கத்தில் பணிபுரிந்த 54 தொழிலாளர்களை காணவில்லை.  அவர்கள் மண்ணுக்குள் புதைந்து போயிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு வருடத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  அவற்றில் பெருமளவில் சீனாவுக்கு கடத்தப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story