உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 23 April 2019 9:30 PM GMT (Updated: 23 April 2019 7:29 PM GMT)

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


* கொலம்பியாவில் கவுகா மாகாணத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

* ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தின் நேட்டோ படை நடத்திய வான்தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகளும், ஹக்கானி வலைக்குழுவின் மூத்த தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அதேபோல் உர்ஸ்கான் மாகாணத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வான்தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

* கனடாவின் நியூபிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள கியூபெக் நகரில் வார இறுதிநாட்களில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அந்த நகரம் வெள்ளக்காடாகி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

* இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், விரைவில் ரஷியா சென்று அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story