உலக செய்திகள்

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா + "||" + Government is responsible for the bomb blast in Sri Lanka: President Maithripala Sirisena

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்புகளில்  பலி எண்ணிக்கை  253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் சிறிசேனா புதன்கிழமை கேட்டுக்கொண்டார். ஐஜிபி ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ஆகியோரை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் சிறிசேனா வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து  காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா செய்திருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இதுகுறித்து பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, ”இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும், புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் வன்முறை : பெரும் பதற்றத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
இலங்கையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2. தொடரும் பதற்றம் எதிரொலி: இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை - அரசு உத்தரவு
இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் சாவு - காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. இலங்கையில் இரு பிரிவினர் இடையே மோதல்; கடைகள் மீது தாக்குதல்
இலங்கையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
5. இலங்கையின் சிலாபாத்தில் பதற்ற நிலை, பாதுகாப்பு அதிகரிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்
இலங்கையின் சிலாபாத்தில் இருபிரிவினர் மோதல் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.