உலக செய்திகள்

டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல் + "||" + Jaish-e-Mohammad terrorists threaten to attack in five states, including Delhi

டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல்

டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல்
டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி,

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் விடுத்துள்ளனர்.

 உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்படும், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்படும்.  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச காவல்துறை டிஜிபி ஆகியோர் இல்லங்களில் தாக்குதல் நடத்தப்படும். மே 6 முதல் 13 தேதிக்குள் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த மிரட்டலை அடுத்து, யோகி ஆதித்யநாத், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இந்த இயக்கம்தான் அண்மையில் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பொறுப்பேற்றது நினைவிருக்கலாம்.