உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 27 April 2019 10:00 PM GMT (Updated: 27 April 2019 5:05 PM GMT)

* சோமாலியா நாட்டின் வடக்கு பகுதியில் அமெரிக்க சிறப்பு படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிற நிலையில், அங்கு தங்கள் நாட்டினர் யாரும் செல்வதாக இருந்தால் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக 3-வது மட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* பீஜிங்கில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா சிசியை ரஷிய அதிபர் புதின் சந்தித்துப் பேசினார். அப்போது எகிப்தில் ரஷிய பங்களிப்புடன் அணுமின்நிலையம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்து உள்ளனர் என தெரியவந்துள்ளது.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, கஜகஸ்தான் அதிபரின் சிறப்பு தூதர் கரிம் மாசிமோவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். கஜகஸ்தானில் நடக்க உள்ள தேர்தல் குறித்து அவர்கள் விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

* அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியோர் ஒன்றிணைந்து வாஷிங்டனை ஈரானுடன் மோத விடுகின்றனர் என்று ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் கூறி உள்ளார்.

* நேபாளம் நடப்பு நிதி ஆண்டில் 6.81 சதவீத பொருளாதார வளர்ச்சி காண இலக்கு நிர்ணயித்துள்ளது.

* மொசாம்பிக் நாட்டில் ‘கென்னத்’ புயல், ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியாலும், மழையாலும் அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story