உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 29 April 2019 10:30 PM GMT (Updated: 29 April 2019 4:58 PM GMT)

* இந்தோனேசியாவின் தலைநகராக ஜகார்த்தா உள்ளது. இதை மாற்றப்போவதாக அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். ஜாவா தீவில் உள்ள ஏதேனும் ஒரு நகர் புதிய தலைநகராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

* தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் இருந்து ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேக்கு சென்ற பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

* கனடா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிரிடியூவை சந்தித்து பேசினார். அப்போது பொருளாதாரம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

* அமெரிக்காவின் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரிவிதிப்பதாகவும், இதனால் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். 

Next Story