உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 4 May 2019 10:30 PM GMT (Updated: 4 May 2019 7:43 PM GMT)

ஒடிசாவை பந்தாடிய ‘பானி’ புயல், வங்காளதேசத்தை நேற்று பதம் பார்த்தது.


* ஒடிசாவை பந்தாடிய ‘பானி’ புயல், வங்காளதேசத்தை நேற்று பதம் பார்த்தது. இந்தப் புயலில் 14 பேர் பலியாகினர். கடலோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

* காசா முனையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் எடுத்த ராணுவ நடவடிக்கையில் 3 பாலஸ்தீனர்கள் பலியாகினர். அவர்களில் 2 பேர் ஹமாஸ் இயக்கத்தினர். அதைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து நேற்று இஸ்ரேலை நோக்கி 50 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

* அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கென்னத் ஸ்மக்ளர் என்ற அரசியல் ஆலோசகருக்கு 1½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* ஈரான் நாட்டில் மின் உற்பத்தி தேவைக்கான 4 அணு உலைகள் 90 நாட்கள் செயல்படுவதற்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

* ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், பக்ரைனுக்கும் அமெரிக்கா 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பனை செய்ய உள்ளது. இதற்கான ஒப்புதலை அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ளது.

* வெனிசூலா நாட்டில் நிலவி வருகிற அரசியல் குழப்பம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சு நல்ல முறையில் நடந்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.


Next Story