ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டை வீசிய பெண்


ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டை வீசிய பெண்
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 9:31 PM GMT)

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் வரும் 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அல்புரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மாரிசன் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் உரையாடினார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், ஸ்காட் மாரிசன் மீது முட்டையை வீசினார். அந்த முட்டை பிரதமர் தலையை உரசியபோதும், உடையவில்லை.

இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அருகில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி விழுந்தார். அப்போது தன் மீது முட்டை வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல், கீழே விழுந்த மூதாட்டிக்கு, பிரதமர் ஸ்காட் மாரிசன் உதவி செய்தார்.

Next Story