குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது - இலங்கை ராணுவம்


குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது - இலங்கை ராணுவம்
x
தினத்தந்தி 11 May 2019 11:03 AM GMT (Updated: 11 May 2019 11:03 AM GMT)

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்க கூடும் என அந்நாட்டு ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.

கொழும்பு,

இலங்கை ராணுவ அதிகாரி மகேஷ் சேன நாயகே சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு சம்பந்தம் இருந்தாலும் அந்த அமைப்பு நேரடியாக இந்த தாக்குதலை வழிநடத்தியது என்று கருதவில்லை. எனினும் தாக்குதலுக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளது. பயங்கரவாதிகள் சிலர் இன்னமும் பதுங்கி இருக்க கூடுமென்ற அவர், குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து வந்திருக்க கூடும்.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கேரளா, காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இலங்கையில் உள்ள இயங்கு தளங்களை முழுமையாக கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.

Next Story