உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 7:15 PM GMT)

தென் ஆப்பிரிக்காவில் நடந்த தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.


* ஆப்கானிஸ்தானில் பக்திகா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நேட்டோ படையின் விமானியில்லா விமானம் தலீபான் பயங்கரவாதிகள் மறைவிடத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் இரு நாட்டு கூட்டுப்படைகள் நடத்திய அதிரடி வேட்டையில் 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* வெனிசூலாவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னணியில் இருந்தவர், பொலிவியாவின் உளவுத்துறை முன்னாள் இயக்குனர் மேனுவல் ரிக்கார்டோ கிறிஸ்டோபர்தான் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டி உள்ளார்.

* தென் ஆப்பிரிக்காவில் நடந்த தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, அடுத்த வாரம் ரஷியாவுக்கு செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சு நடத்த உள்ளார்.

* வடகொரியா அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.


Next Story