உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் சாவு + "||" + Enter into the Hotel in Pakistan Terrorists attack - One dead

பாகிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் சாவு

பாகிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் சாவு
பாகிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
கராச்சி,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென வந்தனர். இவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டல் காவலாளி, அந்த பயங்கரவாதிகளை தடுக்க முயன்றார்.

உடனே அந்த பயங்கரவாதிகள், அந்த காவலாளி மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அங்கேயே அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார். பின்னர் ஓட்டலுக்குள் நுழைந்த அந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாகாண போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் அங்கு அதிரடியாக குவிக்கப்பட்டனர். அவர்கள் ஓட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளை தொடங்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு மாகாண முதல்-மந்திரி ஜம் கமால் கான் அல்யானி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.
2. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர்.
3. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
4. தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி
தனது நாட்டு வான் பரப்பில் பயணிகள் விமானம் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
5. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்
மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.