ஆப்கானிஸ்தானில் 70 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு


ஆப்கானிஸ்தானில் 70 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 8:15 PM GMT (Updated: 12 May 2019 8:02 PM GMT)

ஆப்கானிஸ்தானில் 70 பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க நேட்டோ படை வீரர்களின் உதவியோடு ஆப்கான் வீரர்கள் போராடி வருகின்றனர். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தரைவழியாகவும், வான் வழியாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் மட்டும் 70 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story