உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 12 May 2019 10:15 PM GMT (Updated: 12 May 2019 8:08 PM GMT)

மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் சபபோன் நகரில் 3 ரகசிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.


* ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம் முகெர் மாவட்டத்தில் சாலையோரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

* மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் சபபோன் நகரில் 3 ரகசிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதை குழிகளில் இருந்து 35 உடல்கள் மீட்கப்பட்டன.

* சிலி நாட்டின் அருவ்கானியா பிராந்தியத்தில் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாட்டின் பொருாளாதார திட்டத்தை நாசப்படுத்தும் நோக்கில் அரங்கேற்றப்பட்டது என கூறி பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* சிரியாவின் ஹமா மாகாணத்தில் ஸ்காலிபியா நகரில் கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகுண்டுளை வீசியதில் பச்சிளம் குழந்தைகள் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.


Next Story