உலக செய்திகள்

மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை + "||" + The groom is a bridesmaid friend Harsh grooms

மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை

மணப்பெண்ணை  கட்டிப்பிடித்த  மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை
மணமேடையில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பான மாப்பிள்ளை அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.
மணமேடையில் மணப்பெண்ணை மாப்பிள்ளை தோழன்  இறுக்கமாக கட்டி பிடித்த நிலையில் அவரை மாப்பிள்ளை சரமாரியாக அடித்துள்ளார். இந்த சம்பவம் நைஜீரியாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் திருமண கோலத்தில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் அருகருகில் நிற்கிறார்கள் அப்போது திடீரென மாப்பிள்ளை தோழன் மணப்பெண்ணை இறுக்க கட்டி பிடித்தார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மணப்பெண் சிரித்தப்படி இருந்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் அவரை சரமாரியாக அடிப்பது போல வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒருவர் கூறுகையில், இந்த அடி போதாது, நானாக இருந்தால் மேலும் அடித்திருப்பேன். மாப்பிள்ளை தோழன் கட்டிப்பிடித்த போது மணப்பெண்ணும் சிரித்து கொண்டே இருந்தது ஆச்சரியமளிக்கிறது என தெரிவித்தார்.

ஜெனிபர் என்பவர் கூறுகையில், மாப்பிள்ளை தோழனுக்கு வேறு திட்டம் இருந்தது போலும், அவர் ஏன் வேறு நபரின் மனைவியை அப்படி கட்டிப்பிடிக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வாறு பலரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி: வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பரிதாபம்
அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலியாகினர். வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
3. ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்றது
ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
4. கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்
கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு
ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...