உலக செய்திகள்

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை + "||" + In Sri Lanka  Including national Tahaheet jamaat Permanent restriction for 3 systems

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் 21-4-2019 அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் ஜெய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்
இலங்கை குண்டு வெடிப்பில் ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள், வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
2. இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது
இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
3. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி
இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.
4. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது - இலங்கை ராணுவம்
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்க கூடும் என அந்நாட்டு ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.
5. சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.