உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 14 May 2019 9:45 PM GMT (Updated: 14 May 2019 7:20 PM GMT)

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ஜனநாயக ஆட்சியை கொண்டுவரக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


* ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ஜனநாயக ஆட்சியை கொண்டுவரக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் கார்டூமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலவரம் வெடித்ததில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 4 பேரும், ராணுவ அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* அமெரிக்காவின் சார்பில் 2024-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்காக நாசா நிறுவனத்துக்கு 1.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்து 272 கோடி) நிதி ஒதுக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் வழங்கினார்.

* சோமாலியாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள பாரிரே நகரில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து, பாதுகாப்பு படைவீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 14 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* ஜப்பானில் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Next Story