உலக செய்திகள்

அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி + "||" + In the United States, Case for murdering daughter - Indian origin woman is guilty

அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி

அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி
அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கில், இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்கிற மகள் இருந்தாள்.

இந்த நிலையில், தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சுக்ஜிந்தர்சிங், ஷம்தாய் அர்ஜூன் மற்றும் அஷ்தீப் கவுர் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் தெரிவித்தார்.

ஆனால் அஷ்தீப் கவுரை தண்ணீரில் மூழ்கடித்து, கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷம்தாய் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூன் குற்றவாளி என கூறி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அத்துடன், அவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூனுக்கு 25 ஆண்டுகள் முதல் வாழ்நாள்சிறை வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.
2. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
3. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.
5. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.