பிராக்சிட் ஒப்பந்தம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் மீண்டும் வாக்கெடுப்பு


பிராக்சிட் ஒப்பந்தம்: இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் மீண்டும் வாக்கெடுப்பு
x
தினத்தந்தி 15 May 2019 5:12 AM GMT (Updated: 15 May 2019 5:12 AM GMT)

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிராக்சிட் ஒப்பந்தம் மீது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

லண்டன்

இங்கிலாந்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால், இங்கிலாந்து  பிரதமர் தெரசா மே-வின் பிராக்சிட் செயல்திட்ட வரைவுக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிராக்சிட் செயல்திட்டம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், ஒப்பந்தங்கள் எதுவுமின்றி, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று, வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பிராக்சிட் ஒப்பந்தம்  மீதான வாக்கெடுப்பு, இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியலிருந்து, இங்கிலாந்து  வெளியேறும் பிராக்சிட் முடிவின் மீது, இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதால், நடைபெற இருக்கும் வாக்கெடுப்பின்போது, மீண்டும் தோல்வியடையும் சூழல் உருவாகியிருக்கிறது. 

Next Story