உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* மியான்மரின் சகாயிங் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி தாக்கியது. இதில் சுமார் 800 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
* ஈரான்-அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அந்நாட்டுடன் போரிட விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஈரான் சாதாரண நாடு போல நடந்துகொள்வதையே அமெரிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

* ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் ஏர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பும் படி அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கெட்சிகன் நகரில் 2 குட்டி விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

* ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள அமாமி உஷிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
* ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்நாட்டு படையுடன் நேட்டோ படை இணைந்து நடத்திய வான்தாக்குதலில் ஒரு பெண் மற்றும் குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.
2. உலகைச் சுற்றி...
* வடகொரியாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ஓட்டுப்போட்டார். இந்த தேர்தலில் 99.98 சதவீத வாக்குள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. உலகைச் சுற்றி...
* நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
4. உலகைச் சுற்றி...
* அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகப்படுத்தி வருவது ஆபத்தானது என்றும், இதுகுறித்து உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. உலகைச் சுற்றி...
* ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாள் ஒன்றுக்கு 7 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.