உலக செய்திகள்

இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது + "||" + In Sri Lanka, The suicide attacker in the church His wife is born

இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது

இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது
இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 9 பேர் தற்கொலை படையாக செயல்பட்டுள்ளனர். இதில், 22 வயது சட்டப்படிப்பு படித்த அலாவுதின் அகமது என்பவரும் ஒருவன். இவனுக்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

அலாவுதின் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டபோது அவனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அலாவுதினின் மனைவிக்கு கடந்த 5ஆம் தேதியன்று குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை, குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின்போது அலாவுதினின் தந்தை தெரிவித்துள்ளார்.