உலக செய்திகள்

நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசிய தகவல்களை கண்டறிந்த சீன விண்கலம் + "||" + China's lunar rover makes unexpected discovery on far side of the moon

நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசிய தகவல்களை கண்டறிந்த சீன விண்கலம்

நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசிய தகவல்களை கண்டறிந்த சீன விண்கலம்
நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்களை பற்றிய தகவல்களை முதன்முறையாக சீன விண்கலம் கண்டறிந்துள்ளது.
பெய்ஜிங்,

பூமியில் இருந்து நம்மால், நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், பூமியை சுற்றி வருவதற்கு எடுத்து கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்து கொள்கிறது.

பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலம் அனுப்புவதற்காக சாங் இ 4 மிஷன் எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.  இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மறுபக்கத்தில் கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக யூட்டூ 2 என்ற விண்கலத்தினை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் பகுதியில் வோன் கர்மான் என பெயரிடப்பட்ட குழிப்பகுதியில் விண்கலம் தரை இறங்கியது.  இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவ பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிக்கும் பணிகளுடன், அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் பணியையும் இது மேற்கொள்ளும்.

இந்நிலையில், நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய யூட்டூ 2 விண்கலம், அதில் உள்ள அகச்சிவப்பு கதிர்கள் உதவியுடன் செயல்படும் ஸ்பெக்ட்ரோமீட்டர் சில தகவல்களை சேகரித்து தந்துள்ளது.  இது இரு இடங்களில் ஆய்வு செய்து நல்ல தரமுள்ள தகவல்களை கொண்டு வந்துள்ளது.

இதனை சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் லி சன்லாய் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு செய்துள்ளது.  நிலவில் இறங்கி ஆய்வு செய்த பகுதியில் ஆலிவின் மற்றும் பைராக்சீன் ஆகிய வேதிபொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.  இவை நிலவின் ஆழ்ந்த உட்பகுதியில் இருந்து வந்திருக்க கூடும் என கூறுகின்றனர்.

இந்த ஆய்வில், நிலவில் தரையிறங்கிய பகுதியில் ஆலிவின், கால்சியம் பைராக்சீன் ஆகியவை உள்ளது தெரிய வந்துள்ளது.  இந்த பைராக்சீன்களில் கால்சியம், சோடியம், இரும்பு (2) அல்லது மக்னீசியம் ஆகியவை இருக்கும்.  மிக குறைந்த அளவில் துத்தநாகம், லித்தியம் ஆகியவையும் இருக்கும்.  இதேபோன்று, குரோமியம், அலுமினியம், இரும்பு (3), ஸ்கேண்டியம், டைட்டானியம், வனேடியம் போன்றவையும் இருக்கும்.

இதனால் நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகியவை தொடர்புடைய இதுவரை வெளிவராத ரகசியங்களை வெளிக்கொண்டு வர இந்த ஆய்வு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் விஞ்ஞானிகள் சாதனை
குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் எடுத்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்து உள்ளனர்.
2. கருந்துளை படம் முதல் முறையாக வெளியிடபட்டது
விண்வெளி ஆய்வாளர்களால் கருந்துளையின் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
3. நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்
சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25-ந் தேதிக்குள் அணுக நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. பூமிக்கு வந்து சென்றது வேற்றுகிரகவாசிகள் விமானம் தான் விஞ்ஞானிகள் உறுதி
ரகசியமாக பூமிக்கு வந்து சென்றது வேற்றுகிரகவாசிகள் விமானம் தான் என விஞ்ஞானிகள் 95 சதவீதம் உறுதியாக கூறியுள்ளனர்.
5. நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது
நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளது அது எடுத்து அனுப்பிய ப்டத்தின் மூலம் தெரியவந்து உள்ளது.