உலக செய்திகள்

உலகைச்சுற்றி.... + "||" + Around the world

உலகைச்சுற்றி....

உலகைச்சுற்றி....
வெனிசூலாவில் நீடிக்கும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வருகிறார்.

* கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் விவகாரம் தொடர்பாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த மாதம்(ஜூன்) தென்கொரியா செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


* அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மன்ஹாட்டன் நகரில் இருந்து புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டரில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் அருகில் இருந்த ஹட்சன் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. எனினும் இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

* வெனிசூலாவில் நீடிக்கும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வருகிறார். இதனால் இருநாடுகள் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த நிலையில் வெனிசூலா செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்துசெய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

* அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைகோள்களை, பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் இரவு விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது
ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
2. மக்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை- ஈரான் கண்டனம்
ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை விதித்து உள்ளதாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது
3. அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரை புரட்டிப்போட்ட புயல் - மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாதிப்பா?
இமெல்டா புயலின் தாக்கத்தால் ஹூஸ்டன் நகரில் கனமழை பெய்து வருகிறது.
4. "மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம்
"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்தியா , பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.